ராகங்கள் பதினாறு

Mani M Ragav

பகுதி – 1

 

“மச்சா அவ வர time ஆகிருச்சிடா சீக்கிரம் வாடா” னு சொல்லிட்டே அன்பு அவன் நண்பனை பைக் ல உக்கார வச்சிட்டு பஸ் ஸ்டான்ட் பக்கம் போறான்.

“ஏன்டா நீ டெய்லி போய் பாக்குறனா ok என்ன எதுக்குடா கூட்டிட்டு போய் சாவடிக்கிற”

“உனக்கும் ஏதாச்சு ஒரு பொண்ணு உசார் ஆகும்ல மச்சா அதுக்குதான்”

“எதுக்கு என்னையும் உன்ன மாதிரி வேடிக்க மட்டும் பாக்க சொல்றியா.. ஆமா நீ அந்த பொண்ண பாக்குறது இருக்கட்டும், அந்த பொண்ணு வேற யாரையாச்சு லவ் பண்ணுதான்னு செக் பன்னியா”

“டேய் அந்த பொண்ண எனக்கு ஸ்கூல் படிக்கிறதுல இருந்து தெரியும், இதுவரைக்கும் ஒரு பையன கூட பாத்து ரோட்ல நின்னு பேசுனது கெடயாது.”

“ரோட்ல நின்னு பேசலானா phone ல பேசிட்டு இருக்கும்”

“டேய் ஏ ஆலு அப்படி பட்டவ இல்லடா. அவ ரொம்ப நல்ல பொண்ணு”

“மச்சா இப்படி இருக்குற பொன்னுங்களதாண்டா நம்பவே கூடாது. பூனா மாதிரி இருந்துட்டு திடீர் னு ஒரு பையன் கூட ஓடிருங்க.”

“டேய் கொஞ்சம் வாய மூடிட்டு வரியா”

“இல்ல மச்சா நீ வேல செய்ற இடத்துலயே இதுவரைக்கும் 2 பொண்ணுங்க உன்கிட்ட propose பண்ணி இருக்கு. நீ என்னடானா இன்னும் அந்த பொண்ணையே பாத்துட்டு இருக்க”

“First love மச்சா அவ்ளோ சீக்கிரம் முடியாது”

 

“மச்சா அவ வந்துட்டாடா” னு அன்பு அவன் நண்பன்கிட்ட சொல்லிகிட்டே பஸ் ஸ்டாண்ட் போய் அவளோட ஒரு பார்வைக்காக காத்துட்டு இருக்கான். இன்னைக்காச்சு உன் ஆளு ஆனந்தி கிட்ட உன் லவ்வ சொல்லிருவியாடா னு நண்பன் கேக்க, இன்னைக்கு சொல்லாம விட மாட்டேன்னு  வழக்கம் போல அன்பு சொல்ல, ஆனந்தியோட பார்வையோ Duke ல டெய்லி வந்து colleagues அ பஸ் ஏத்தி விட்டுட்டு போற அஸ்வின் மேலதா இருக்கு.

 

அஸ்வின், ஒரு MNC கம்பெனி ல வேலை செய்யுற மாடர்ன் பையன். கலர் கலர் ஆ டிரஸ் பண்ணிட்டு ஸ்டைலா தல வாரிட்டு கூலர் போட்டுட்டு ஒரு Play Boy காண எல்லா அம்சமும் இருக்குற ஒரு பையன்.

 

அன்பு ஏதோ ஒன்னு படிச்சிட்டு ஏதோ ஒரு வேலைய செஞ்சிட்டு குடும்ப கஷ்டத்த பாத்துட்டு  மீதி நேரங்கள்ல friends கூட நேரத்தை கழிக்கிற மிடில் க்ளாஸ் பையன்.

 

ஆனந்தி, மிடில் கிளாஸ் family ல பொறந்துட்டு upper class life அ வாழ ஆசைப்படும், தன் விதிமுறைகளை மீறாத ஒரு சராசரி பெண்.

 

அன்பு தினமும் ஆனந்தி யை பார்த்துக்கொண்டு இருந்தாலும் ஆனந்தி யின் முழு ஈர்ப்பும் அஸ்வின் மேல் தான். ஆனந்தி தன்னை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டுகொண்ட அஸ்வின் அன்று திடீரென ஆனந்தி ஏறிய பஸ்சில் ஏறி ஆனந்தியை site அடித்து கொண்டே பேச தொடங்கினான்.

 

“டெயிலி பைக் ல போய் போர் அடிக்கிது அதா இன்னைக்கு உங்க கூட பஸ்ல வரலாமேன்னு வந்தேன்”

 

ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சிட்டு திரும்பிகிட்ட ஆனந்தி ஒரு பெரிய சந்தோஷத்துல பரந்துட்டு இருக்க அஸ்வின் அடுத்த stopping லயே bye சொல்லிட்டு இறங்கி அலன்யா கு call பண்ணி பேசுறான்.

 

அலன்யா, ரொம்ப stylish, modern, Hi – Fi life வாழ்ந்துட்டு இருக்க ஒரு middle class பொண்ணு. அலன்யா வும் அஸ்வின் உம் கொஞ்சம் வருஷமா லவ் பண்ணாலும் அஸ்வின் பல பொண்ணுங்ககூட சுத்திட்டு இருக்குறது தெரிஞ்ச உடனே அவளும் தனக்கு புடிச்ச பசங்க கூட சுத்த ஆரம்பிச்சிட்டா. அந்த விஷயம் தெரிஞ்சதும் அஸ்வின் அவளை கண்டிச்சாலும் அத பெருசா பொருட்படுத்தாம அலன்யா அஸ்வின்கு புடிக்காதத பண்ண ஆரம்பிச்சா. அஸ்வின்கு அது ரொம்பவே மன வருத்தத்தை கொடுத்தாலும் அலன்யாவ விட முடியாம அவளை சமாதானம் படுத்திக்கிட்டே தான் இருக்கான்.

 

பஸ் விட்டு இறங்கி  அலன்யாகு phone பண்ணி “நான் வந்துட்டேன் நீ எங்க இருக்க?” னு கேக்க, கொஞ்ச நேரத்துல அஸ்வின் முன்னாடி அலன்யா.

 

“இந்த மாதிரி உன்ன bus stand ல மீட் பண்ணி எவ்ளோ நாள் ஆகுது டி..!”

“நடிக்காதடா, சீக்கிரம்  என்ன விஷயம் னு சொல்லு”

“ஏ சீக்கிரமா பேசிட்டு எங்க போக போறியாம்?”

“ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, போகணும்.”

“நீ ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாற்ற”

“என்ன புரிஞ்சிக்கல உன்ன? ஓஹோ நீ ஏவக்கூட வேணாலும் சுத்துவ, நா உன்கிட்ட மட்டும் தா சுத்தனும் னு நெனைக்குறியா!”

“நீ ரொம்ப பேசுற, உன்ன ரொம்ப லவ் பண்ணிட்டேன் அதா பொறுமையா போயிட்டு இருக்கேன், எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.”

“ஆனா எனக்கு லிமிட் லாம் கெடயாது. நா எப்படி வேணாலும் இருப்பேன் யாருகூட வேணாலும் பேசுவேன் பழகுவேன். நீ அத கேக்காத”

என்ன பொண்ணுங்குற திமிறுல பேசுறியா”

“நீ பையங்குற திமிர் ல தான இவ்ளோவும் பண்ற. நம்ம எது பண்ணாலும் இவளுக்கு தெரியாது, so நாம  எப்படி வேணாலும் இருக்கலாம் ஹ்ம்ம் … சீக்கிரம் வேற ஒரு பொண்ண பாரு. sorry வேற ஒரு பொண்ண கல்யானம் பன்னிகோ. நா ரொம்ப நால் இப்படி உன்கூட பேசிட்டு இருக்க மாட்டேன்…”

“அலன்யா, நா எத்தனை பொண்ணுங்க கூட பேசி இருந்தாலும் உன்ன மாதிரி எந்த பொன்னும் என் மனச தொட்டது இல்ல”

 

திமிரா சிரிச்சிட்டு அலன்யா அங்க இருந்து விலக , அஸ்வின் அலன்யா கை புடிச்சி “ப்ளீஸ் போகாத” ன்னு சொல்ல அலன்யா

 

“மத்த பொண்ணுங்க உனக்கு Pre Paid, நா உனக்கு Post paid ஆ..! விட்றா..”

 

அலன்யா அஸ்வின் கிட்ட இருந்து விலகி கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல அர்ஜுன் காக wait பண்ணிட்டு இருக்கா.

 

அர்ஜுன், சென்னை ல ஒரு டாப் 20 பிசினஸ் மென் லிஸ்ட்ல இருக்குற ஒரு பணக்கார இளைஞ்சன்.

 

ஆடி கார் ல அர்ஜுன் வந்து அலன்யா வ கூட்டிட்டு driving ல பேசிட்டே போறாங்க.

 

“ரொம்ப நேரம் எனக்காக wait பண்ணியா அலன்யா?”

“இல்ல அர்ஜுன் நா வந்து just 10 minutes தா ஆகுது.”

“பொதுவா நா day time ல OMR பக்கம் வர்றது இல்ல. Full of traffic you know.”

“Sorry அர்ஜுன் next time நீ இவ்ளோ தூரம் வர வேணாம், நாம வேற எங்கேயாச்சு meet பண்லாம்.”

“ச்சா ச்சா.. உனக்காக இங்க வந்து உன்ன பாக்குறதுல எனக்கு சந்தோஷம் தான்.”

 

அலன்யா thanks அர்ஜுன் னு சொல்லி அவன் கைய்ய புடிச்சிக்க, அர்ஜுன் அவன் கைய்ய அலன்யா கை மேல வச்சிட்டு

 

“நா next week ஒரு business விஷயமா Australia போறேன். திரும்பி வர எப்படியும் 1 வீக் ஆகும். so இந்த வீக் குள்ள நா சொன்ன இடத்துக்கு போலாம். உன்கிட்ட நெறய மனச விட்டு பேசணும்.”

 

கொஞ்ச நேரம் யோசிச்ச அலன்யா “நா 2 days ல யோசிச்சி சொல்லட்டுமா” னு சொல்ல, அர்ஜுன் sure சொல்லிட்டு அலன்யாவ drop பண்ணிட்டு  ஆராதனாவ பாக்க அவளோட ஹாஸ்பிடல் கு போறான் அர்ஜுன்.

 

ஆராதனா, foreign ல படிச்சிட்டு வந்து தன் அப்பா Hospital லேயே dean ஆ இருக்குற ஒரு பணக்கார வீட்டு பெண். அம்மா இறந்ததுக்கு அப்பறம் அப்பா மட்டும்தான். பெருசா எந்த பாசமும் கிடைக்காத ஆராதனா, காசு பணத்தை எதிர்பாக்காத சுத்தமான அன்பிற்காக ஏங்கும் ஒரு பெண். அர்ஜுன்  ஆராதனாவின் அப்பா பாத்தா மாப்பிள்ளையா இருந்தாலும் அவனோட பேச்சு நடவடிக்கைல அவன் மேல் ஆர்வம் இல்லாத ஆராதனா, எப்போ அர்ஜுன் பேச வந்தாலும் பெருசா entertain பண்ணாம avaoid பண்ணி அனுப்ச்சி விட்டுருவா.

 

அலன்யா வ drop பண்ணிட்டு hospital cafeteria கிட்ட போய் அர்ஜுன் ஆராதனா கு call பண்ணி

 

“ஆரதனா நா cafeteria ல இருக்கேன் நீ free யா இருந்தா கொஞ்சம் இங்க வரியா?”

“நா ஒரு conference ல இருக்கேன் என்ன விஷயம்? ”

“சும்மதா பாக்கணும் போல இருந்துச்சு, அதா, ஏன் உன்ன பாக்க வர கூடாதா?”

“சரி இருங்க வரேன்”

 

conference னு பொய் சொல்லியும் அர்ஜுன் போகாததால வேண்டா வெறுப்பா அர்ஜுன பாத்து பேசுறா ஆராதனா.

 

“சொல்லுங்க அர்ஜுன் என்ன சாப்பிடுறிங்க”

“நீ விஷம் கொடுத்தாலும் சாப்பிட ரெடியா இருக்கேன்”

“ஒரு நிமிஷம்.. அரவிந், ஒரு கப் விஷம் கொண்டு வாங்க, sir கு வேணுமாம்.”

“ஹா ஹா அதுல பாதி நீதா குடிக்க போறங்குறத மறந்துராத”

“எங்க cafeteria ல பாதிக்கு மேல எல்லாமே விஷம் மாதிரிதா இருக்கும்.. நீங்க சொல்லுங்க..”

“ஹா ஹா.. ஹ்ம்ம்..  so என்ன avoid பண்ண ட்ரை பண்ற.. Am  I  Right ?”

“இவ்ளோ சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டிங்களே, நீங்க ஜீனியஸ் தான்”

“ஆனா உங்க அப்பா சேத்து வைக்க ட்ரை பன்றாரே, உன்னையும் என்னையும் நம்ம பிசினஸயும்”

“Mr . அஸ்வின், நீங்க எங்கள விட பெரிய ஆளுங்க, நீங்க ஏன் வேற இடம் ட்ரை பண்ண கூடாது”

“ஹ்ம்ம்… பண்றேன்.. ட்ரை பண்றேன்”.

 

பின் ஒரு நாள்…

 

ஆராதனா அவள் காரில் போய்ட்டு இருக்கும்போது திடீரென ஒரு நாய் குட்டிமேல் மோத, லேசான காயத்துடன் கீழே விழுந்த நாய் குட்டியை பார்த்து அன்பு காரை நிருத்தி நாய் குட்டியை தூக்கி “Hello  வெளிய வாங்க” னு ஆராதனா வை வெளியே அழைத்து பேசுகிறான்.

 

“உங்க மேல தப்பு இல்லனு தெரியும், ஆனா இடிச்சது நீங்க, so வாங்க hospital போகலாம்”

“இது உங்க நாயா?”

“இல்ல, street dog னு நினைக்குறேன்”

“ஏங்க உங்க நாய் இல்லல, அப்றம் எதுக்கு என் வேலைய கெடுக்குறீங்க”

“யாருதா இருந்தா என்னங்க? இதுவே public ல யாரையாச்சு ஏத்தி இருந்தீங்கனா உங்க பையனா, உங்க பொண்ணா, உங்க அப்பா வானு கேட்டுட்டு இருப்பிங்களா? பயந்து பதறி hospital தூக்கிட்டு ஓட மாட்டீங்க?.. மத்த உயிர் நா எலக்காரமா?”

“உங்களுக்கு அவ்ளோ அக்கற இருந்தா நீங்க கூட்டிட்டு போங்க, எனக்கு நெறய வேலை இருக்கு”

“madam ஒரு நிமிஷம், நமக்கு அடி பட்டா கத்தி சொல்லுவோம், hospital போய்ட்டு சரி பண்ணிப்போம். இதுங்க யாரு கிட்ட சொல்லி அழும்? பாவம், வாயில்லா பூச்சி. நமக்கு லேசா கால்ல அடிபட்டு மருந்து போட்டாலே அன்னைக்கு நைட் வலில தூக்கம் வராது. இந்த நாய் குட்டி இன்னைக்கு எப்படி தூங்கும்? நீங்க வரலனாலும் பரவலா ஒரு cab or ஆட்டோ புடிச்சி கொடுங்க நா பாத்துக்குரேன்..”

 

ஆராதனா எதுவும் பேசாமல் அன்புவை பார்த்துக்கொண்டே இருக்க

 

“என்னங்க யோசிக்கிறீங்க, என்கிட்ட பைக் தா இருக்கு, இந்த ரோட்ல lift கேட்டாலே எவனும் நிக்க மாட்டான் இதுல எப்படி நா இத தூக்கிட்டு போரது. என்கிட்ட கார் booking app கூட இல்ல. friends எல்லாரும் office ல இருப்பாங்க. கொஞ்சம் help பண்ணுங்க please”

 

“சரி வாங்க, நானே கூட்டிட்டு போறேன்” னு சொல்லி ஆராதனா veterinary hospital கு கூட்டிட்டு போக ஆராதனா கார் ஓட்டிக்கொண்டே இருவரும் பேச தொடங்கினர்.

 

ஆராதனா: “உங்க பேரு என்ன? எந்த ஊரு நீங்க?”

“ஏன் எனக்கு மாப்ள பாக்க போறிங்களா?”

“ரொம்ப வாய் பேசுவீங்களோ?”

“வாய் இல்லனா தோ இந்த சிம்பு கூட நம்மள மதிக்க மாட்டான்”

“யாரு சிம்பு?”

“அடி பட்டு கெடக்குறானே இவன்தான் சிம்பு”

“ஓ அதுக்குள்ள பேர் வச்சாச்சா?”

“இதுக்குன்னு நாள் நச்சத்திரமா பாத்துட்டு இருக்க முடியும்.. சிம்பு உன்ன உங்க அம்மா கிட்ட கொண்டு போய் சேக்குற வரைக்கும் அமைதியா வரணும் சரியா?”

“அதுக்கு அம்மா இல்லனா என்ன பண்ணுவீங்க”

“அம்மா இல்லனா என்ன, நானே என் வீட்டுக்கு தூக்கிட்டு போயி வலப்பேன்”

“தூக்கிட்டு போய்ட்டா அதுக்கு அம்மா இல்லாத குறை போயிருமா”

“உண்மையான பாசம்  காட்டுற எல்லாருமே நம்ம அம்மா தான்..  என்ன சிம்பு நா சொல்றது correct தான?”

 

கொஞ்ச நேரம் அமைதியாகி விட்டு பின் ஆராதனா

 

“அப்போ அவங்க அம்மா கிட்ட கூட்டிட்டு போறதுக்கு நாந்தா கூட வரணுமா!”

“ஹாஹா நீங்க இது பண்றதே பெரிய விஷயம், hospital ல மட்டும் drop பண்ணிருங்க, என் friend வந்துருவான், நா பாத்துக்குறேன்”

 

அன்பு பேசியது ஆராதனா மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை கொடுத்துச்சு.. பின் hospital சென்று treatment ஆரம்பித்ததும் ஆராதனா அங்கிருந்து கிளம்பினாள். போகும்போது hospital entry list ஐ பார்க்கும்போது அவன் பெயர் அன்பு என்று தெரிந்து கொண்டால், அவன் phone நம்பர் note பண்ணிக்கிட்டு அங்கிருந்து கிளம்பினாள் ஆராதனா.

 

பின் ஒரு நாள்…

 

வழக்கம் போல் அன்பு ஆனந்தியை பார்த்துக்கொண்டிருக்க பஸ் இல் ஏறிய அனந்தி வெளியே நின்று கொண்டிருந்த அஸ்வின் ஐ பார்த்து சிரித்தாள், பின் அஸ்வின் bye சொல்ல, ஆனந்தியும் பஸ் இல் இருந்த படி அஸ்வின்கு bye சொன்னால் அதை அன்பு பார்த்து அதிர்ச்சி அடைந்து கொஞ்ச நேரம் எல்லாம் blank ஆகி கண் கலங்கிய படி அங்கிருந்து சென்றான்.

 

அஸ்வின் அவன் வீட்டில் இருக்கும்போது அலன்யா விர்க்கு phone செய்து

 

“முக்கியமான விஷயம் னு சொன்னியே என்ன?”

“இனிமே என்னக்கு call பன்னாத, நாம இனிமே பேசிக்க வேணாம்”

“ஏன்?”

“எனக்கு கல்யாணம் ஆக போகுது”

“ஒ congrats.. யாரு மாப்ள?.. கல்யாணத்துக்கு என்ன கூப்பிடுவியா?”

“நீயும் சீக்கிரம்  கல்யாணம் பண்ணிக்கோ அஸ்வின். move on பன்னு.”

“கடைசில என்ன கழட்டி விட்டுட்டள்ள”

“அது உன்னோட கர்மா. என்னால என்ன பன்ன முடியும்”

“உன் முடிவ மாத்திக்கவே மாட்டியா அலன்யா?”

“நான் முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆகிருச்சு அஸ்வின் sorry”

“sorry.. ஹ்ம்ம்..  என்ன  reason? நா சொல்லட்டுமா? நீ நெனைக்குற life ஏ வேற. அத தேடி தான் நீ ஓடிட்டு இருக்க. நா பொண்ணுங்க கூட சுத்துறது உனக்கு ஒரு சாக்கா போச்சி என்ன கழட்டி விடுறதுக்கு. correct ஆ?”

“என்னால இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது, phone வைக்கிறேன். good bye ..”

 

அஸ்வின் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு பின் சிரித்துக்கொண்டே அவன் phone contact இல் அலன்யா பெயரை மாற்றி கர்மா என்று save செய்கிறான்.

 

அலன்யா அர்ஜுன் கு போன் செய்து “coming Wednesday நீ freeyaa இருந்தா நாம ecr போலாம் நீ  சொன்ன இடத்துக்கு” என்று சொல்ல அர்ஜுன் சின்ன சிரிப்புடன்

 

“Sure, போலாம்.. நா morning call பண்றேன்”

“Okay அர்ஜுன் waiting for your call”

“அலன்யா..”

“Yes அர்ஜுன்”

“Thank you for trusting”

 

“உன்ன நம்பாம வேற யார நம்ப போறேன் அர்ஜுன்.. இனி நீதா எனக்கு எல்லாமே..” என அலன்யா சொல்ல அர்ஜுன் சிரித்துவிட்டு அலன்யா விற்கு bye சொல்லிட்டு second line ல வந்த அப்பா விற்கு போன் செய்கிறான்.

 

“Yes dad, temme”

“அந்த பொண்ணு உனக்கு set ஆகாதுடா, நாங்க எல்லாரும் பேசி பாத்தாச்சு, அவங்க அப்பவே பெருசா interest காமிக்க மாற்றாரு, நானும் அம்மாவும் வேற ஒரு இடம் பாத்து வச்சிருக்கோம், பொண்ணு அழகு, வசதி, எல்லாம் நல்லா இருக்கு. புதன் கிழமை போய் பாத்துட்டு வந்துரலாம்”

“வேணாம் dad..”

“யேம்ப்பா?

“Wednesday வேணாம், Thursday or Friday போலாம்”

“சரிப்பா. நா அவங்க வீட்ல பேசிட்டு சொல்ரேன்”

 

நைட் ல friends கூட உக்காந்து அன்பு beer குடிச்சிட்டு பேசிட்டு இருக்கான்.

 

“மச்சா அவ உனக்குலாம் worth எ இல்லடா. அவளுக்கு கொடுத்து வைக்கல..”

“அவ எனக்கு worth இல்லையா இல்ல அவளுக்கு கொடுத்து வைக்கலயா? ஏதாச்சு ஒன்னு சொல்லு. போதைல உலராத.”

“மச்சா உனக்கு feel எ இல்லையா? இவ்ளோ strong ஆ இருக்க?”

“இருக்கு மச்சி, night தூங்கும்போது அழுவேன். எவ்ளோ குடிச்சாலும் உங்க முன்னாடிலாம் அழ மாட்டேன் கவலை படாதீங்க”

“புரியுது மச்சி, கொஞ்ச நாள் ஆகும்தா. பாத்துக்கலாம் விடு.”

 

பேசிட்டு இருக்கும்போதே அன்புக்கு ஒரு new number ல இருந்து call வருது. attend பண்ணி hello னு சொன்னதும் ஒரு girl voice.

 

“ஹாய் அன்பு”

“ஆமாங்க நீங்க?”

“சிம்பு இப்போ எப்படி இருக்கான்?”

 

அதை கேட்டதும் புரியாத சந்தோஷத்தில் அன்பு கொஞ்சம் சிரித்துவிட்டு “ஆ.. சிம்புக்கு என்ன அவன் சந்தோஷமா இருக்கான்” னு பேச தொடங்கினான்.

 

தொடரலாம்…

Our Ratings
Click to rate this post!
[Total: 2 Average: 5]